செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தமிழ் சொற்கள்



தமிழ் சொற்கள்


                                            Image result for தமிழ்
  1. Whatsapp –  புலனம்
  2. Facebook –  முகநூல்
  3. Youtube – வலையொளி
  4. Instagram – படவரி
  5. Wechat – அளாவி
  6. Messanger – பற்றியம்
  7. Twitter – கீச்சியம்
  8. Telegram – தொலைவரி
  9. Skype – காயலை
  10. Bluetooth  – ஊடலை
  11. Wi-Fi – அருகலை
  12. Hotspot – பகிரலை
  13. Online – இயங்கலை
  14. Broadband – ஆலலை
  15. Offline –  முடக்கலை
  16. Thumbdrive – விரலி
  17. Hard disk – வன்தட்டு
  18. Battery – மின்கலம்
  19. GPS – தடங்காட்டி
  20. CC Tv – மறைகாணி
  21. OCR – எழுத்துணரி
  22. LED – ஒளிர்விமுனை
  23. 3 D – முத்திரட்சி
  24. 2 D –இருதிரட்சி
  25. Projector –  ஒளிவீச்சி
  26. Printer –  அச்சுப்பொறி
  27. Scanner –  வருடி
  28. Smart phone – திறன் பேசி
  29. Charger – மின்னூக்கி
  30. Sim card – செறிவட்டை
  31. Digital – எண்மின்
  32. Cyber- மின்வெளி
  33. Router – திசைவி
  34. Selfie – தம்படம்
  35. Thumbnail- சிறுபடம்
  36. Meme –  போன்மி
  37. Print screen – திரைப்பிடிப்பு
  38. Inkjet – மைவீச்சு
  39. Laser –சீரொளி


திங்கள், 20 பிப்ரவரி, 2017

எதுக்கு அலைச்சல்..நாங்க இருக்கிறோம்..பேஸ்புக்...!!



➽ இன்றைய நவீன உலகில் மிகவும் முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுபவது வேலை இல்லா இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான்.

➽ இதுபோன்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளமான பேஸ்புக்... நாங்க இருக்கிறோம் எதற்கு உங்களுக்கு அலைச்சல்..! என்று அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.

➽ வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் பத்திரிகைகளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இனி அனைத்து வேலைவாய்ப்பு குறித்தும் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் ஏற்பாடு செய்துள்ளது.

➽ பேஸ்புக் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி பல ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் உதவுகிறது. அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

➽ முதல்கட்டமாக கனடா உட்பட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

➽ இதன்படி பேஸ்புக் இனிமேல் 'JOBS " என்ற புக்மார்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் இந்த பகுதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திறமையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். நல்ல விஷயம் அல்லவா!


உலக சமூக நீதி தினம்



ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் நீதி வாழ்கிறதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்..?

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

தாலி கட்டுவது ஏன்..?


தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும், இரண்டாவது முடிச்சு குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும், மூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

வரலாற்றில் இன்று...





சத்ரபதி சிவாஜி

⚔ வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார்.

⚔ தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

⚔ வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி 53வது வயதில் (1680) மறைந்தார்.

உ.வே.சாமிநாத ஐயர்

✍ தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்று}ரில் பிறந்தார்.

✍ பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று பல இடர்களை எதிர்கொண்டு, அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார்.

✍ இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

✍ தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 87-ஆம் வயதில் (1942) மறைந்தார்.


கோபர்நிகஸ்

👉 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவர் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிகோலஸ் கோபர்நிகஸ் என்று மாற்றிக்கொண்டார்.

👉 எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சு+ரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

👉 இவரது காலத்துக்குப் பிறகே இவரது கோட்பாடுகளை கலிலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யு+ஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நு}லில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பு+மி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பு+மியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

👉 வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசுத் தூதர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய நிகோலஸ் கோபர்நிகஸ் 70-வது வயதில் (1543) மறைந்தார்.