திங்கள், 20 ஜூன், 2016

நோபல் பரிசு



       Øஇது உலகின் மிகப் பெரிய விருதாகக் கருதப்படுகிறது.

     Øஇலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், உடலில், சமாதானம் மற்றும் பொருளாதாரம் என்னும் 6 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடந்தோறும் இவ்விருது வழங்கபடுகிறது.

 Ø ஆல்பிரட் நோபல் என்பவர் இவ்விருதை உருவாக்கினர். இவர் டைனமைட் என்ற வெடி பொருளைக் கண்டு பிடித்தவர்.

 Ø1900ல் “நோபல் அறக்கட்டளை” நிறுவப்பட்டது.

 Ø இந்த விருதின் பரிசுத் தொகை 7.25 கோடி 1901 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

 Øபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1969-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பரிசு சுவிடன் நாட்டின் மத்திய வங்கியால் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      Ø      இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு “ ஸ்டாக் ஹோமில்” வழங்கப்பட்டு வருகிறது.

 Øஅமைதிக்கான நோபல் பரிசு பரிசு மட்டும் நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவில் வழக்கப்படுகிறது.



மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

           
சிறு வயதில் சர்கஸ், பொருட்காட்சி, விழாக்கள் போன்றவற்றில் மாயா ஜாலக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். டெலிவிஷன் வந்த பிறகு அதிலும் பலமாஜிக்தந்திரக் காட்சிகள் வந்தன. இந்திர ஜாலம் என்பது இதற்கான வடமொழிச் சொல். தமிழில் இதற்குக் கண்கட்டு வித்தை என்று பெயர். ஆனால் அதிலும் வித்தை என்பது சம்ஸ்கிருதம்! மாயாஜால தந்திரக் காட்சிகள் என்றால் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். காமசூத்திர நூல் எழுதிய வாத்ஸ்யாயனர், இதையும் பெண்களுக்கான 64 கலைகளில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறார்.
ஆதிகாலம் முதற்கொண்டு இந்தியர்கள் செய்துவந்த மிகப்பெரிய மாயாஜாலக் காட்சிகயிறு வித்தைஎன்பதாகும். இதைப் பற்றி பல வெளி நாட்டு யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். மந்திரவாதி ‘’\சூ! மந்திரக் காளி!’’ சொன்னவுடன் ஒரு கயிறு தானாகவே மேலே எழும்பும். அதைப்பிடித்துக் கொண்டு ஒரு மந்திர வாதி வானத்தை நோக்கி மேலே மேலே செல்வான். பிறகு மறைந்து போய் விடுவான். சில காட்சிகளில் அவன் பெயரைக் கூப்பிட்டவுடன் கீழே வந்து நிற்பான். இபின் படூடா என்ற யாத்ரீகர் 700 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு காட்சியை சீனாவில் பார்த்ததாக எழுதிவைத்துள்ளார்.
ஆதிசங்கரர் எழுதிய வேதாந்த பாஷ்யத்தில் இந்த கயிற்று வித்தையைக் குறிப்பிட்டு இதை மாயம் என்கிறார். ஆக அவரது காலத்துக்கு முன்னரே 2000 ஆண்டுகளாக இந்த வித்தை இந்தியாவில் காட்டப்பட்டு வருகிறது!!   இதற்கும் இந்திரனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் வானவில்லை இந்திரனின் வில் (இந்திர தனுஸ்) என்று சம்ஸ்கிருதத்தில் அழைப்பர். அது போல இந்த ‘’மாஜிக் ஷோ’’வும் வண்ணம் நிறைந்ததாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம்.

                                              (தொடரும்..)

ஞாயிறு, 19 ஜூன், 2016

வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்..!!



ஒரு திருநங்கை சகோதரியுடன் பேசி கொண்டிருந்தேன்.கடவுள் செய்த தவறுதானே உங்கள் இந்த வலிக்கு காரணம் என்றேன்,
சகோதரி சொன்னால் இது வலி அல்ல வரம் என்று

ஒரு பெண்ணின் உணர்வுகளை உன்னால் உணரமுடியுமா என்று கேட்டாள் ?

நான் என்னால் முடியாது என்றேன் ஆனால் அவள் சொன்னாள் எங்களால்
முடியும் என்று

ஒரே நேரத்தில் ஆண் பெண் இருவர் உணர்வுகளை எங்களால் உணரமுடியும் இது எங்களுக்கு வலியல்ல வரம் என்றாள்

இந்த சமுகத்தால் புறக்கணிக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள்
கடவுள் செய்த தவறையும் வரம் என நினைத்து வாழ கற்று கொள்கிறார்கள்
நாமோ சின்ன சின்ன வலிகளையும் பேரிய வலியாய் நினைத்து வருந்தி வாழ்நாளை கண்ணீரில் கழிக்குறோம்

உலகில் கவலையில்லாத மனிதர்கள் கல்லறையில் தான்இருக்கிறார்கள்
கருவறையில்கூட மனிதனுக்கு வலி இருக்கிறது

மனிதனை தாய் வலியில்தான் பிறசவிக்கிறாள்
அந்த வலியைவிடவா
நம் கவலையின் வலி பெறியது
அந்த வலிக்கு தாய் பயந்திருந்தால் இங்கு மனிதர்களே இருந்திருக்க போவதில்லை

எனக்கு தெறிந்த தம்பதிகள் ஒருவர் இருந்தார்கள் அவர்களுக்கு வேறு ஒரு உறவே இல்லை
இருவருக்கும் ஒருவருக்கொருவர்தான் உறவு

ஓர்நாள் அதிகாலையில் அந்த கணவன் மரித்துப்போனான் நான் அங்கு போனபோது அந்த சகோதரி தனிமையில் அழுது கொண்டிருந்தாள்.
இப்போது நான் யாருக்கு அழுவது

இறந்த அந்தபோன அந்த கணவனுக்கா?
இல்லை இருந்த அந்த ஒரே உறவையும் இழந்து வாடும் அந்த சகோதரிக்கா? மனமெல்லாம் பாரமாய் அங்கிருந்து வந்து விட்டேன்
சமிபத்தில் அந்த சகோதரியை பார்த்தேன் புன்னகையோடு! சொன்னாள் அண்ணா நீங்கள் எல்லாம் இருக்கும் நம்பிக்கையிதான் வாழ்கிறேன் என்று
நம்பிக்கைகள்தான் வலியை மறக்க மருந்தாகிறது

வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்

முடிந்த போன நொடி போழுதை அப்போதே குழந்தைகள் மறந்து விடுகிறது
பிறக்க போகும் அடுத்த நிமிடங்களை எண்ணிக்கொண்டிருப்பதில்லை கிடைத்த நிமிட பொழுதை வலிகளை மறந்து அனுபவிக்கிறது
அதனால் தான் குழந்தைகள் எப்போதும் புன்னகையோடு இருக்கிறது
அந்த புன்னகைதான் எல்லோருக்கும் பிடிக்கிறது
கோவமாய் அடித்துவிட்டு
அழுது கொண்டிருக்கும் குழந்தையை
புண்ணகையோடு கரம்விரித்து
அழைத்து பாருங்கள்
கண்ணீர் கோடுகள் அழியாமலே புண்ணகையோடும் வந்துவிடும் அக்குழந்தைகள்

அதுதான் குழந்தையின் சந்தோசத்திற்குக்  காரணம்
கவலைகள் மறப்பது

வலிகளை மறப்பதற்கு இழந்து போன இழப்புகளை மறந்து விடுங்கள் எல்லாவற்றையும் ரசிக்க கற்று கொள்ளுங்கள்
பிறருக்கு விட்டு கொடுங்கள்
அடுத்தவர்கள் தவறுகளை முடிந்தவறை மன்னித்து மறந்துவிடுங்கள்

சின்ன சின்ன விட்டு கொடுத்தல்கள்தான் பெரிய வலிகளுக்கு மருந்தாய் இருக்கிறது.

நிறம் மாறும் சிலந்திகள்

         
Image result for சிலந்திகள்


பச்சோந்திகள் நிறம் மாறுவதைப்போல சில வகை சிலந்திகளும் சூழலுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடியது.மிசுமினா எனும் சிலந்தி இனம் வெள்ளை,மஞ்சள்,ரோஜா நிற மலர்கள் மீது வசிக்கும்போது அந்தந்த மலரின் நிறத்தில் தோன்றுகிறது.இலைகளுக்கு இடம் மாறினால் பச்சை நிறமாக மாறிக் கொள்கிறது.
இதை பரிசோதித்துப் பார்க்க வெள்ளை நிற சிலந்தியை மஞ்சள் காகிதத்தில் போட்டுப் பார்த்தனர். அது ஒன்றிரண்டு நாட்களில் மஞ்சள் நிறமுடையதாக மாறியது.இதேபோல வேறு வண்ண சிலந்திகளும்,தான் வசிக்கும் இடத்தின் சூழலின் நிறத்திற்கு ஓரிரு நாட்களில் மாறி விடுக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது..



பெருமைக்குரிய பெண்மை!

பெருமைக்குரிய  பெண்மை!

1)  சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்தான்.        –மகாத்மா காந்தி.

2)  இறைவனின் படைப்புகள் எல்லாவற்றையும் விட அழகிலும், மேன்மையிலும்  சிறந்தவள் பெண்தான்.        –மில்டன்.

3)  பெண்ணே   மனிதனின்   உயர்ந்த     ஊக்கங்கள்    ஏல்லாவற்றிலும்      விளக்கு.         –ஜேம்ஸ் எல்லீஸ்.

4)  அவதூறு  என்பது  நல்ல  பெண்ணின்  வீட்டு வாசலில் மாய்ந்து பலமிழந்து விடுகிறது.        –ஹீஸ்.

5)  பெண்ணின்   மடியில்   இறையன்பு  வளர்கிறது.        –இக்பால்.

6)  பெண்  இல்லாத   வீடு  மதிப்பில்லாதது.   –யாரோ.

7)  காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.     –ஷேக்ஸ்பியர்.

8)  எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப் படுகிறார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் குடியேறும்.        –மாகாபாரதம்.

9)  பெண்ணுரிமை   இல்லாத  நாடு  காற்றில்லாத வீடு.    –லெனின்.

10)         ஒரு    பெண்ணை    படிக்க    வைப்பது,   ஒரு   குடும்பத்தையே   படிக்க   வைப்பதற்கு சமம்.    –சார்லஸ் டிக்கன்ஸ்.

11)         பொய்மை,  கோழைத்தனம்,  கீழ்க்குணம்   ஆகிய  மூன்றுமே  பெண்கள்  பெரிதும்  வெறுப்பவை.      –ஷேக்ஸ்பியர்.

12)         நல்ல  சந்தர்ப்பம்  வாய்க்கும்  போது, தன்னையே  தியாகமாக்கிக்  கொள்ள விழைவதுதான் பெண்மை ! அது அவர்களுடன் பிறந்த இயல்பு.    –வில்லியம் சாமர்சப்.


வியாழன், 16 ஜூன், 2016

ஹிஸ் அக்கௌன்ட் ஆப் ஹிஸ் டிஸ்அப்பாயின்மன்ட் இன் லவ்


ஹிஸ் அக்கௌன்ட் ஆப் ஹிஸ் டிஸ்அப்பாயின்மன்ட் இன் லவ்
                                          --ரிச்சர்ட் ஸ்டீல்

சர் ரிச்சர்ட் ஸ்டீல் இக்கட்டுரையில் ரோஜர் என்ற கற்பனை கதாப்பாத்திரத்தின் காதல் தோல்வியை பற்றி கூறுகிறார்.ஒரு நாள் ஸ்போக்டேட்டர் மற்றும் ரோஜர் இருவரும் சாலையேர வீதியில் நடந்து செல்கின்றனர்.அப்பொழுது அந்த விடோவிற்கு கொடுத்த தனது சொத்தின் ஒரு பகுதியை காண்கிறார்.அவள் இவருக்கு பெரும் காதல் துக்கத்தை கொடுத்தவல்.இவரை கடுமையாக கையாண்டவள்.சர் ரோஜரும் மற்ற காதலர்களைப்போல மரத்தில் பெயரை செதுக்கி வைத்து தன் பாரத்தை இரக்கி வைக்க முயற்ச்சிக்கிறார்.ஆனால்,அவர் நிணைவுகளை அது இன்னும் அதிகரிக்கிறது.தனது 22ஆம் வயதில் ஷேரிப் பதவியைப் பெற்று தன் சொத்துக்களின் பொருப்பையும் கையில் கொண்டார்.அவர் அப்பொழுது அழகாகவும் அனைவரையும் கவரும் வணம் தோற்றத்தை கொண்டிருப்பார். ஒரு நாள் வழக்கு ஒன்றை கையாள நீதிமன்றம் சென்னபோது அந்த விடோவை பார்தார்.அவளது பார்வை ரோஜரை கைதுசெயத்துவிட்டது.அந்த விடோ நாட்டுபுறமக்களையும் மட்டுமல்லாமல் நகர மக்களையும் கவரும் வண்ணம் இருப்பாள்.அனைவரும் அவளிடம் பேச விரும்புவர் ஆனால், அவளுக்கோ ஆண்களை பிடிக்காது.பருவம் மாருவதை போல தன் ஆண் ரசிகர்களால் தன் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பாள்.ஒரு நாள் யாரோ ரோஜரிடம் அந்த விதவைக்கு உங்கள்மேல் உள்ள அபிப்ராயம் வேறு என்றார். அதனை கேட்டு மயங்கி புத்தாடை உடுத்திக் கொண்டு அவளை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றார்.அவளோ அழகு மட்டுமல்லாமல் அறிவும் நிறைந்தவள்.அவளது எந்த கேள்விக்கும் ரோஜரால் விடையளிக்க முடியவில்லை.அரைமணி நேரம் களித்து அங்கிருந்து விடைபெற்றார்.பின்னர் அடிக்கடி அவள் வீட்டிற்கு சென்றார். அவளே அவரை கேளிசெய்தும்,சற்று கடுமையாகவம் நடந்து கொண்டதால் அவளை விட்டு அவரை தனிமை படுத்தி கொண்டார்.அவள் குரலோ இனிமையாக இருக்கும்.கைகளோ மெளிதாக இருக்கும் என்று அவளை பற்றி தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பர்.

சர் ரோஜர் அட் சர்ச்

                                         
         
                                                  சர் ரோஜர் அட் சர்ச்
                                    --ஜோசப் அடிசன்
பதிணெட்டாம் நூற்றாண்டின் கட்டுரையாளர்களுள் அடிசன் முக்கியமான பங்களிப்பவர்.அவரது கட்டுரைகள் அனைத்தும் தன் நன்பரால் நடத்தப்படும் ``ஸ்பேக்டேடர்`` வார இதழுக்கு கொடுப்பார்.இவர்களது கற்பனை கதாப்பாத்திரமான ``சர் ரோஜர் டி கவர்லி`` படிப்பவர்களிடையே புகழ் பெற்ற ஒன்றவராவார்.
            ஜோசப் அடிசனின் இக்கட்டுரையில் புனித நாளை நாட்டுப்புற மக்களும் ரோஜராலும் எவ்வாறு உணரப்படுகிறது என்று கூறியிருப்பார்.சர் ரோஜர் ஒரு சிறந்த பக்தர்.பல புனித புத்தகங்கள்,அழகான பல்பிட் துனி மற்றும் கலந்துரையாடல்களுக்கான மேஜை போன்ற பலவற்றை தேவாலத்திற்கு அளித்து அதற்க்கு மெழுகூட்டினார்.தனது வேலையாட்களிடம் புத்தகம்,முட்டியிடுவதற்கு அழகிய துணி மற்றும் கலந்துறையாடல்களுக்கான மேஜை போன்ற பலவற்றை தேவாலத்திற்கு அளித்து அதற்க்கு மெழுகூட்டியுள்ளார்.தனது வேலையாட்களிடம் ப்ராத்தனை புத்தகம், முட்டியிடுவதற்கு அழகிய துணி,மற்றும் ஒரு பாடகரயும் தனது பணியாளர்களுக்கு சரியான முறையில்``சாம்ஸ்``பாட நியமித்தார்,ரோஜர் அந்த நிலத்தின் தலைவராயின் அந்த மக்கள் கீழ்பணிந்து நடப்பர். ப்ராத்தனையின் போது ரோஜரின் சில சிறப்பு அம்சங்களை எழுத்தர் இங்கு குறிப்பிடுகிறார்.ஒரு பாடலை நீலமாக பாடுவதும்,மற்றவர்கள் அமர்ந்திருக்கும்போது எழுந்து நின்று அந்த ப்ராத்தனைக்கு வராதவர்களை தன் பணியாட்கள் உதவியாலும் கவனிக்கிறார்.பின்னர் மறுநாள் பிராத்தணை முடிந்த பின் வெளி வரும்போது வராதவர்களின் தந்தை அவர்களது மனைவி, மக்கள் உடல் நலத்தை விசாரித்து காரணம் கொள்வார்.

            மேலும் சில சிறுவர்களுக்கு பைபிளை உள்நுழைப்பதற்கு சில போட்டிகள் வைத்து பரிசலிப்பர்.இப்பொழுது பணியில் இருக்கும் குமாஸ்தாவிற்கு வருடன் ஐந்து பவன்ஸ் சம்பளம் உயர்த்தி பணியில் அதிகமாக ஈடுபடுத்துவார்.மேலும் அவர் இறந்த பின் அவரை விட சிறந்த ஒருவரை நியமிப்பார்.ரோஜர் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே பார்சன், ஸ்குவைரி என்ற இறு பிரிவினரும் அடிக்கடி வாக்குவாதப் செய்து கொணெடே இருப்பர்.ஸ்குவைரி இண மக்கள் பார்சன் இணத்தை பழிவாங்க தம் மக்களை நார்தீகவாதியாக மாற்றுவர்.பார்சன் இணத்தவர் இவர்களைப் புறங்கூறுவர்.இவர்களை எழுத்தர் ச்சேப்லியன் மற்றும் சர் ரோஜர் இடையிலான நட்புறவைக் கொண்டு தொடர்பு படுத்துகிறார்.அமைதியாக இருப்பவரே என்றும் சிறந்தவர் என்கிறார். 

புதன், 15 ஜூன், 2016

வரவேற்பு


Image result for கல்லூரி கவிதைகள்

பள்ளியின் நினைவுகளை ரோஜா மலராக
     சூடியிருக்கும் உங்களுக்கு இந்த கல்லூரி
ரோஜா வனமாக அமைந்திட;
     சுற்றி இருக்கும் அனைவரும் தோழியாக பழகிட;
வேப்பங்காயாய் கசக்கும் தருணத்தையும்
     வெல்லமாக இனிக்கும் தருணமாக மாற்றிட;
இந்த கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
     நீங்காத நினைவுகளாக மலர்ந்திட!
தாளம் பூவாய் மணந்திட! இன்சுவை நல்கிட!
     குயிலின் குரல் ஆரவாரத்தை கூட்ட
கைத்தட்டல்களையே தாளமாக்கி! எங்கள் அன்பையே
     மல்லிகை மலராகத் தூவி வரவேற்கிறோம்;
சகோதரியாக அல்ல உங்கள் அன்பிற்குறிய தோழியாக!


ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆர். எல். மூர்.


                                                             Image result for கணிதம் புகைப்படம்

    1898ஆம் ஆண்டு டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், 1901 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.  கணித மேதைகளுள் ஒருவரான ஜெ.ஜெ.சில்வெஸ்டரின் மாணவரான “ஹால்ஸ்டெட்” என்பவர் ஆர்.எல்.மூரின் ஆசிரியராக விளங்கினார்.
    ஹால்ஸ்டெட்டின் பரிந்துரையின் பேரில் மூா் 1903ஆம் ஆண்டு சிகாகோ பல்பலைக்கழகத்தின் மாணவரானத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     சிகாகோ பல்கலைகழத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.  அந்தப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கு ஏற்ற சூழலுடன் அமைந்திருந்தது.
     மூர் சிகாகோ பல்கலைக்கழத்தில் 1905ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.  அதன் பிறகு டென்னஸி பல்கலைக்கழகத்தில் மேலும் ஓர் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டார்.
     அங்கு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சேர்க்கை நுண்கணிதம் (Integration Calculus), அங்க கணிதம் (Arithmetics) ஆகியவற்றில் மூர் சான்றுகள் தேவைப்படாது வெளிப்படையான பல்வேறு உண்மைகளை எழுதி வெளியிட்டார்.
    அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பிரின்ஸ்டன் கல்லூரியிலும் நார்த்-வெஸ்டர்ன் கல்லூரியிலும் பாடங்கள் நடத்தினார்.  இறுதியாக பென்சிவேனியா பல்கலைக்கழத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
    1919ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை மூர் கணிதத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து, 38 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்.  அக்கட்டுரைகள் ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் பாயின்ட் செட் தியரி என்னும் நூலாக 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
    1930ஆம் ஆண்டு முதல் அவர் ஆசிரியப் பணியில் ஆர்வம் காட்டி வந்தார்.  புதுமையான முறையில் பாடங்கள் நடத்தி, மாணவர்களை ஊக்குவித்தார்.  இதனால் அவரது புகழ் மேலும் வளர்ந்தது.
     1930ஆம் ஆண்டு வாஷிங்டன் தேசிய அறிவியல் கல்விக் கூடத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூர், 1938ஆம் ஆண்டு “அமெரிக்கன் மேத்தமேட்டிக்கல் சொஸைட்டியின்” தலைவராகப் பொறுப்பேற்றார்.
    இவ்வாறு கணிதத்துறைக்கு பல்வேறு பங்களிப்புகளைச் செய்த ஆர்.எல். மூர், 1974 ஆம் ஆண்டு மறைந்தார்.  பென்சில்வேனியா பல்கலைக்கழக மாணவர்கள் அவரை மிகச்சிறந்த கணிதப் பேராசிரியர் என்று புகழ்ந்தனர்.

குறிப்பு - படித்ததில் பிடித்தது
நூல்   - உலக கணித மேதைகள்

சோன்யா கோவலெவ்ஸ்காயா


                   Image result for sonya kovalevskaya

     சோன்யா 1850 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்தார்.  அவரது தந்தையின் மைத்துனர் ஒருவருக்கு கணிதத்தல் அதிக ஆர்வம் இருந்தது.  அதன் காரணமாக சோன்யாவுக்கும் கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.  அக்காலத்தில் ரஷ்யாவில் பெண்கள் அதிகம் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.
     நிக்கோலாய் நிகன்ரோவிச் டிர்டர் என்னும் கணித நிபுணர் எழுதிய நூலைப் படித்த சோன்யா, அந்நூலைப் பற்றிய மிகச்சிறந்த விமர்சனம் எழுதி அனுப்பினார்.  அதைப் படித்த நிகன்ரோவிச் வியந்தார்.  அவர் சோன்யாவின் கணித ஆற்றலைப் புரிந்து சோன்யாவைப் பாராட்டினார்.
     மேலும் அவர் சோன்யாவின் தந்தையைச் சந்தித்து, சோன்யாவுக்கு கணிதம் கற்பிக்க வேண்டும் என்று அவரது தந்தையை வற்புறுத்தினார்.  அதற்கு சோன்யாவின் தந்தையும் சம்மதித்தார்.  அவர் சோன்யாவிற்கு 17 வயது ஆகும்போது, தனிப்பட்ட முறையில் நுண்கணிதம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.  சோன்யாவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நுண்கணிதத்தைச் சிறந்த முறையில் கற்றுக்கொண்டார்.  சோன்யா மேற்படிப்பு கற்க விரும்பினார்.
     அக்காலத்தில் ரஷ்யாவில் மேற்படிப்பு வசதிகள் இல்லை.  எனவே அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார்.  அதன் காரணமாக அவர் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்.  சோன்யா, “விளாடிமிர் கோவலெவ்ஸ்காயா” என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
     அதற்குக் காரணம், விளாடிர் கோவலெவ்ஸ்காயா ஐரோப்பிய நாடுகளை அறிந்த ஒரு பதிப்பாளராகத் திகழ்ந்தார்.  அதன் பிறகு சோன்யாவின் பெயர் சோன்யா கோவலெவ்ஸ்காயா என்று மாறியது.
     சோன்யாவும் அவரது கணவரும் ஹைடில்பெர்க் நகருக்குப் பயணமானார்கள்.  அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இருவருக்கும் அனுமதி கிடைத்தது.  சோன்யா விஞ்ஞானிகளான “ஹெல்ம் போல்ட்ஸ், கிர்சாஃப்” போன்றோருடன் விஞ்ஞானம் பயின்றார்.  ”கோனிக்ஸ்பொர்கர்” என்னும் கணிதமேதையுடன் சேர்ந்து கணிதம் பயின்றார்.
     “வியர்ஸ்ட்ராஸ்” என்பவரின் மேற்பார்வையில் அவர் வேற்றுமைச் சமன்பாட்டில் (Differential Equations) கணித ஆய்வுகள் மேற்கொண்டார்.  வியர்ஸ்ட்ராஸ் சோன்யாவுக்கு “டாக்டர்” பட்டம் பெற தொடர்ந்து உற்சாகம் தந்தார்.  சோன்யா அவ்வேளையில் பெர்லின் நகரில் வசித்து வந்தார்.
     சோனியா “ஏபெலின் இன்டக்ரல்” என்னும் தலைப்பில் தனது கணித ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.  1874ஆம் ஆண்டு சோன்யாவின் ஆய்வுக் கட்டுரைகளுக்காக டாக்டர் பட்டம் (Ph.D)  வழங்கப்பட்டது.  அவரது ஆய்சிக் கட்டுரைகள் “க்ரெல்” என்னும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
     வேற்றுமைச் சமன்பாட்டில் அவர் செய்த ஆய்வுகள் காச்சி – கோவலெவ்ஸ்காயா தேற்றம் என்னும்  (Cauchy – kovaleskaya Theorem) பெயரில் வெளியிடப்பட்டது.  சோன்யாவின் கணவர் விளாடிமிர் கோவலெவ்ஸ் காயாவும் டாக்கர் பட்டம் பெற்றார்.
     1874 ஆம் ஆண்டு சோன்யாவும் அவரது கணவரும் ரஷ்யாவுக்குத் திரும்பினர்.  ஜெர்மன் நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தும், அவர்கள் அருவரும் ரஷ்யாவில் ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலேயே பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.  அவர்கள் சட்டக்கல்வி பயின்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
     எனவே அவர்கள் சட்டத் தேர்வை எழுத முற்பட்டனர்.  விளாடிமிர் 1875 ஆம் ஆண்டே சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார்.  அதன் பிறகும் விளாடிமிருக்கு சரியான வேலை அமையவில்லை.
     இவ்வேளையில் சோன்யாவுக்கு “சோஃபியா” என்ற பெண் குழந்தை பிறந்தது.  அவர் 1881 ஆம் ஆண்டு தனது மகளுடன் பெர்லின் நகருக்கே திரும்பிச் சென்றார்.  கணவர் விளாடிமிர் மட்டும் ரஷ்யாவிலேயே தங்கிவிட்டார்.  சோன்யா பெர்லின் நகருக்கு வந்த சில நாட்களில் அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  அவரது கணவர் விளாடிமிர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதே அதிர்ச்சிக்குக் காரணம் ஆகும்.
     இருப்பினும் சோன்யா மனம் துவண்டுவிடவில்லை.  அவர் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்றார்.  அங்கே பெண்கள் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.
     அவ்விடத்தில் ”ஆக்டா” என்னும் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.  அப்பத்திரிகையில் பணிபுரிந்து வந்தபோது அவருக்கு பல கணித நிபுணா்களோடு நட்பு ஏற்பட்டது.  ஸ்டாக்ஹொம் நகரில் சோன்யாவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே நடந்தது.  மேலும் “ஹோக்ஸ்கோலா” என்னும் இடத்தில் ஒரு கல்விக்கூடத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பும் சோன்யாவுக்கும் கிடைத்தது.  அவ்வாறு புகழ்பெற்று விளங்கிய சோன்யா தனது 41வது வயதிலேயே காலமானார்.
குறிப்பு – படித்ததில் பிடித்தது
நூல்   - உலக கணித மேதைகள்