வியாழன், 6 ஏப்ரல், 2017

எந்த வயதில் எவ்வளவு சேமிப்பு..




ஒரு தனிநபரின் நிதியில் அடிப்படை விதியாக சொல்லப்படுவது, இளம் வயதிலேயே சேமிக்கத் துவங்குங்கள் என்பது தான். கூட்டு வட்டியின் பலனை ஒருவர் முழுமையாக பெற வேண்டும் என்பதே, இதற்கான காரணம்.

ஒருவர் தனக்கு தானே ஊதியம் அளித்துக் கொள்ளும் முறையே சேமிப்பு ஆகும். நாம், நமக்காக சம்பாதிக்கும் போது, அதில் முதல் செலவானது தனக்காக செய்வதே சரியாக இருக்கும். எனவே தான், ஊதியத்தில் ஒரு பகுதியை, முதலில் சேமிப்பாக, உங்களுக்காக எடுத்து வையுங்கள் என்கின்றனர்.

சேமிப்பின் பயன் சேமிப்பதன் அடுத்த கட்டம், அதை கொண்டு என்ன செய்கிறோம் என்பது. சேமிப்பதற்கு இரண்டு முக்கிய நோக்கம் இருக்கிறது.

சேமிக்கப்படும் தொகையில், ஓய்வூதிய நிதி மற்றும் அவசர கால நிதிக்கான தொகை கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

ஓய்வூதிய நிதி, பணி வாழ்க்கைக்கு பின் கைகொடுப்பது. அவசர கால நிதி, எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க உதவும்.

ஒருவரின் வாழ்வியல் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்றாலும், பொதுவாக எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரு வரையறை இருக்கவே செய்கிறது. வயதிற்கேற்ப இந்த தொகை அமையும். இதை எளிதாக ஒரு பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

20 வயது துவங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு தனிநபர் தன்னுடைய சம்பளத்தில் சேமிக்க வேண்டிய பட்டியலை காண்போம்.

ஒவ்வொரு பருவத்திலும் சேமிக்க வேண்டிய தொகை :

ஓய்வு கால நிதிக்கான தொகை

20கள் மொத்த வருமானத்தில் 10 சதவீதம்

30கள் மொத்த வருமானத்தில் 12.5 சதவீதம்

 40கள் மொத்த வருமானத்தில் 15 சதவீதம்

50கள் மொத்த வருமானத்தில் 20 சதவீதம்

 60கள் இப்படி சேமித்து வந்திருந்தால் இந்த வயதிற்கு பின், சுதந்திரமாக அதன் பலனை அனுபவிக்கலாம்.

அவசரகால நிதிக்கான தொகை :

20கள் குறைந்தது 3 மாத அடிப்படை செலவுக்கான தொகை

 30கள் 3 முதல் 6 மாத கால செலவுக்கான தொகை

40கள் 6 முதல் 12 மாத கால செலவுக்கான தொகை

 50கள் 12 முதல் 24 மாத கால செலவுக்கான தொகை

 60கள் 3 முதல் 5 ஆண்டு கால செலவுக்கான தொகை










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக