வியாழன், 6 ஏப்ரல், 2017

பண்பாடுகள்

  
        மனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, முஸ்லீம், ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.
    வட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை அண்மித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக