திங்கள், 24 ஏப்ரல், 2017

எளிய பாட்டி வைத்தியம்.....



1) வெள்ளைபூண்டையும், தித்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

2) மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயில் ஊர வைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர தலை குளிர்ச்சி பெரும்

3) காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்தால் தலைமுடி கருமையாக மாறும்.

4) மாதுளம் பழச் சுளைகளை வேக வைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

5) வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊர வைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்

6) வாழைப்பழத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் தொந்தரவு குறையும்.

7) எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் துங்கும் முன் குடித்து வந்தால் இருமல் குறையும்.

8) அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய் , தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.

9) அத்தி இலையை நன்கு அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.

10) அருகம்புல் சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக