Skip to main content

Posts

Showing posts from March, 2017

இன்றை சிந்தனை (காணொளி)

வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு! என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு.. என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு. அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்.. அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன். இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன். உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது. வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்! எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!

நம்பிக்கை

அண்ட வெளியில் சுற்றித் திரியும்
சூரியன், பூமி, நட்சத்திரம் யாவும்
தன்னைத்தவிர வேறு ஒருவரை
நம்பி இல்லை!
நண்பனே நீயும் உன்னை
முழுமையாக நம்பு
உன்னை வெற்றி கொள்ள
வேறொருவர் இங்கில்லை!

நல்லதை செய் நல்லதே நடக்கும்

ஒரு வகுப்பில் முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை, அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின் முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான். ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக் கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.
கண்ணன் என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும் பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம்கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.
மையக்கருத்து:

அக்கால பெண்கள் விளையாடிய விளையாட்டுகள்

அக்கால பெண்கள் விளையாடிய  விளையாட்டுகள்

விண்வெளி களஞ்சியம்

தமிழ்

தமிழ் வளர போராடுவோம்!

 தமிழ் மறைந்துக்கொண்டுவரும் இக்காலத்தில்

இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி

 தமிழை வளர்க்க வேண்டும்.

எவ்வாறு தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடினோமோ

அதே போன்று தமிழுக்காகவும் ஒன்றுக்கூட வேண்டும்.

 உதாரணமாக  சொல்ல வேண்டுமானால்

தமிழ் என்பது பழச்சாறு மாதிரி,

ஆங்கிலம் என்பது பெப்சி   கொக்ககோலா  மாதிரி

எது  ஆரோக்கியமானது என்று நீங்களே  முடிவு  செய்யுங்கள்.

தமிழை அழிக்க   நினைப்பது

                        தமிழர்களின்  உயிரை  எடுப்பது  போன்றது.

                              விடமாட்டோம் தமிழர்  உயிர் உள்ளவரை. 

கண்ணாடி

நான் ஒரு கண்ணாடி நீ சிரித்தால் நானும் சிரிப்பேன் நீ அழுதால் நானும் அழுவேன் நீ கோபம் பட்டால் நானும் கோவபடுவேன் நீ அடித்தால் நான்  திருப்பி அடிக்க மாட்டேன் ஏனென்றால் நான் உடைந்து விடுவேன்...

தெரிந்து கொள்ளுங்கள்

Whatsapp-புலனம்,
 youtube-வலையொளி,  
 kype-காயலை,
 bluetooth-ஊடலை, 
 wifi- அருகலை
,hotspot-பகிரலை,     
 broadband-ஆலலை, 
 online-இயங்கலை,
 offline-முடக்கலை, 
  thumdrive-விரலி,
  hard disk-வன்தட்டு,     
  gps-தடங்காட்டி.                                 

எவ்வளவு தான் ஆங்கில வார்த்தைகள் வந்தாலும் அனைத்திற்கும் தமிழ் மொழியிலும் பொருள் உண்டு என்பது  பெருமைக்குரிய செய்தி ஆகும்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது..............

ஒரு ஆசிரியரிடம் அச்சம் இருக்க வேண்டும் 

அதே நேரத்தில் ஒரு துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழன், 

தோழியாகவும் 

மற்றும்

நமது திறமைகளை வெளிக்கொணர உறுதுணையாக 

இருக்க வேண்டும். 

பாடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும்.

 மாணவர்களின் முன் உதாரணமாக ஆசிரியர் திகழ வேண்டும். 

இவ்வாறு இருந்தால்ஒவ்வொரு மாணவனும் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவான்.

கணித்தமிழ் நூலகம் !

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவைக்கான ஆதார நிதியாக ரூ 25000 வழங்கப்பட்டது. கணித்தமிழ் வளர்ச்சியை மாணவிகளிடம் கொண்டுசெல்லும் முயற்சியாக ரூபாய் 8000 மதிப்புள்ள நூல்கள் வாங்கி கணித்தமிழ் நூலகத்தை எம் கல்லூரியில் உருவாக்கியுள்ளோம்.
ஆதார நிதி வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநருக்கும், மாநில கணித்தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி ஐயா அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
எம் முயற்சிக்கு என்றும் துணை நிற்கும் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும் எம் கல்லூரி நிர்வாகத்துக்கும் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எம் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் செயல் வீராங்கனைகளான மாணவிகளுக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
கணித்தமிழ் நூலகத்துக்காக வாங்கிய நூல்களின் விவரம்..
தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி
செல்பேசி பழுது நீக்குதல்
கீ போர்டு சார்ட் கட் எம் எஸ். ஓ
கீ போர்டு சார்ட் கட் - சி ஜி டி
கணினியின் அடிப்படை