Skip to main content

Posts

Showing posts from January, 2017

எடிசன் குறிப்பு

ஒரு நாள் பள்ளியிலிருந்து  வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே  கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தம் ஆக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்.      “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகி விட்டார்.      எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒரு நாள் தனது வீட்டின் பழைய சமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பு  ஒரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சை ஆக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார். அதில் இப்படி எழுதியிருந்தது      ”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்.” என்று இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு…

பாரதம் யார் பிடியில். .??

நேற்றைய பாரதம்
ஆங்கிலேயர் பிடியில். ..!!

இன்றைய  பாரதம்
அரசியலின் பிடியில். ..!!

நாளைய பாரதம்
யார் பிடியில். ..???

இனியொரு விதி செய்வோம். ..!!!



இலித்தியம்

                                   இலித்தியம் இலித்தியம்(Lithium, Li) என்பதுவெள்ளிபோலும்தோற்றம்உள்ளமென்மையானஒருமாழை(உலோகம்). இதுதனிமஅட்டவணையில்3ஆவதாகஉள்ளஒருதனிமம். இதன்அணுவெண்3. இதன்அணுக்கருவில்மூன்றுநேர்மின்னிகளும்நான்குநொதுமிகளும்உள்ளன. இதுமிகவும்மென்மையாகஉள்ளதால், ஒருகத்தியால்எளிதாகவெட்டலாம்.மாழைகள்(உலோகங்கள்) யாவற்றிலும்மிகக்குறைவானஎடைகொண்டமாழைஇலித்தியம்

யார் இந்த விவசாயி..???

1031 - சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை. பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. 1032 - உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாதெழுவாரை எல்லாம் பொறுத்து. பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். 1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. 1034 - பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர். பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள். 1035 - இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர். தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார். 1036 - உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவ…