Skip to main content

Posts

Showing posts from 2017

இப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா? யார் இந்த ப்ரோபசர்?

இப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா? யார் இந்த ப்ரோபசர்?

வட இந்தியாவில் தீன்டையால் பெட்ரிரோலியம் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் அவரது மாணவர்கள்க்கு கொடுத்த தீபாவளி Assignment.இதோ உங்கள் பார்வைக்கு!!!!!

எவை சொல்லப்பட வேண்டும்?

எவை சொல்லப்பட வேண்டும்? 1.யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. 2.துன்பம் வருகையில் யாரிடமும் அனுதாபத்தை எதிர்ப்பார்க்கக்கூடாது.அது நம்மை பலவீனமாக்கிவிடும். 3.துன்பம் வரும்போது மிகப் ப்பொறுமையாக விஷயங்களை கையாள வேண்டும். 4.அனைவருக்கும் பிடித்வர்களாக இருப்பது கடினம். 5.வாழ்க்கையில் சில நெருக்கமானவர்களை கொள்வது அவசியம். 6.எவ்வளவு நெருங்கிய நன்பனாக இருந்தாலும் சில விஷயங்களை பகிரக்கூடாது.
7.உழைப்பால் உயர்தவர்களால் தான் உண்மையான வெற்றியை உணர முடியும். 8.இந்த உடல் தான் நாம் வாழ்வதற்க்கான இடம். 9.மற்றவர்களை உண்மையா நேசிப்பது மிக க்கடினம்.
10.இவ்வுலகில் பலர் முயற்ச்சி செய்கின்றனர், சிலர் விடாமுயற்ச்சி செய்கின்றன.

இந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை!!!

இந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை!!!  அம்மா ; என்னங்க எனக்கு இன்னைக்கு ஒடம்பு சரியில்லங்க தல வலிக்குது, வயிரு வலிக்குது, கால் வலிக்குது,மூட்டு வழிக்குது, கண் எரியிது என்னால இன்னைக்கு சமைக்கவே முடியல மதியம் பசங்களுக்கு சாப்பாடு பார்சல்ல வாங்கிட்டு வந்துருங்க. அப்பா ; எத்தன தடவ சொல்றது வண்டி ஓட்டும்போது கால் பன்னாதனு! வாங்கீட்டு வந்து தொலக்கறேன்.போன வைய்
அப்பா;(மைன்ட் வாய்ஸ்); இவங்களுக்கெல்லாம் வெளிய வந்து ஒரு 5ரூ சம்பாரிச்சாதா என்னோட கஷ்டம் புரியு! அம்மா;(மைன்ட் வாய்ஸ்); அவங்களுக்கெல்லாம் ஒரு நாள் நா செய்ற வேலையெல்லாம் செஞ்சாத என்னோட கஷ்டம் என்னனு புரியு.


இந்தியாவின் அடுத்த அப்துல்கலாம் விருது

கல்லூரி பயணம்

மொட்டாக தோட்டத்துள்
தனியாக நுழைந்தேன்...!!!
மற்ற மொட்டுகளுடன்
பேச பேச மலர்ந்தேன்...!!!
அழகிய பூந்தோட்டமாக
உருமாறும் வேளையில்
வேறு ஒரு இடம்
நோக்கி பயணிக்க
தொடங்கிவிட்டோம்...!!!
பல இன்பங்கள்
துன்பங்கள்
பிரிவுகள்
நினைவுகள்
சுமந்து கொண்டே...!!!!!!!!!!

# கல்லூரி பயணம் #

---மு. நித்யா

மின்சாரம்

கூடவே
இருந்தபோது
எதுவும்
பெரிதாக
தோன்றவில்லை ....
ஒருநாள்
இல்லாத
போதுதான்
உணர்ந்தேன்,,
உன்
மாபெரும்
சக்தியை.....

# மின்சாரம் #

---மு. நித்யா.

விதை

எவரும் வாய்ப்பே தரவில்லை
நான் வளரமாட்டேன் என்று....!!
என்னையும் ஒருவர்
மண்ணில் விதைத்தார்,,,,
ஒருநாள் நானும்
முளைத்து வருவேன் என்று...!!
நானோ பல நாள்கள்
முயற்சி செய்தேன்...!!
இன்று
பூமிக்கு அடியில்
வேர் பிடி‌க்க
ஆரம்பித்து விட்டேன்...!!
விரைவில்
பூமிக்கு மேலேயும்
அவதரிப்பேன்,,
அனைவருக்கும்
பயன்தரும்
பெரிய மரமாக...!!!!

# விதை #

----மு. நித்யா.

இளம் பெண் பேச்சாளர்கள் தேடல்..

அதிகம் யாரும் பயணிக்காத பாதையில் துணிச்சலுடன் செல்லும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் எமது கல்லூரியில் மாபெரும் பேச்சுப்போட்டி வருகிற ஜனவரி 6 அன்று  நடைபெறவுள்ளது.

இப்பேச்சுப்போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை அடிப்படையாக வைத்து  11 மற்றும்  12 - ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் நடத்தப்படும். மேலும் சிறந்த பள்ளிக்கு சிறப்பு பரிசான LED  டிவி வழங்கப்படும்.

வளர்ந்து வரும் நாட்களில் அன்று முதல் இன்று வரை ஆண் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக தான் உள்ளது என்பதில் ஐயமில்லை.

இளம் பெண் பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில்  பேச்சுப்போட்டி நடைபெறும் என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்கிறோம். ஆர்வமுள்ள பள்ளி மாணவிகள் உங்கள் பேச்சு திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்விழாவிற்கு தமிழ் உறவுகள் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,வணிகவியல் துறை சார்ப்பில் நடத்தும் முதலாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைப்பு - "EARNINGS MANAGEMENT PRACTICES IN INDIA" கருத்தரங்க நாள் - 05.01.2018

கட்டுரை வழங்க இறுதி நாள் - 20.12.2017
தொடர்புக்கு - 8807473229 ( Dr.R.Vasuki - Head, Department of Commerce )

தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



பெண் காமத்துக்கா.? காதலுக்கா.?

India's daughter documentary film..

இன்று தான் இந்த குறும்படத்தை பார்த்தேன்.என்னுள் அடக்க முடியாத அளவுக்கு கோபமும் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு கோபம் கலந்த கண்ணீருமே இந்த பதிவுக்கு காரணம்.

பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால்  அவளை காமப் போதைக்கு ஊறுகாயாகப் பயன்படுத்துவது தனது அம்மாவை விற்றுக் குடிப்பதற்கு சமம். இதற்கு காரணம் யார். ? ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பு தான் என்று நாம் யாவரும் அறிவோம். ஆனால்  ஒரு குழந்தையின் வளர்ப்புக்கு அன்னையை தவிர இன்னும் சிலருக்கு பங்கு உண்டு. ஆம் அது அந்த குழந்தையின் தந்தை அவரை அடுத்து அவளது ஆசிரியர்கள் இவர்கள் மூவரின் வளர்ப்பில் தான் ஒரு குழந்தை வளரும்.கல்வி இல்லாத குழந்தைகளும் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் லட்சுமி குறும்படம் நம்மை கோவத்திலும் சிந்திக்க வைத்தது.ஒரு சராசரி  அலுவலகம் சென்று நடுத்தர வாழ்க்கையை நடத்தும் பெண்ணை குறித்து இருந்தது.

இந்த  இரண்டு குறும்படத்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு பெண்ணையும் தசையாக மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு இலட்சுமி உருவாக்கப்…

அன்று இன்று !

அன்று ஒரு பெண் எங்கோ பிறந்து,வளர்ந்து,கல்வி கற்று,
             வேலைக்கு செல்லமுடியாமல்! இன்று அவள் திருமணம் முடிந்து பின்  
அவள் இருந்தால் சமையல் அறையில்!!




நிலா

சித்திரை வானத்தில் முத்து போன்ற உருவம் கொண்டு
                           பளபளப்பாக ஒளி தரும் சந்திரனே! சிவன் தலைமேல் அரை வடிவமாய் காட்சியளிக்கும் நீ!                         இனி வரும் காலங்களில் என்ன செய்யப்போகிறயோ!!

சாணக்கியா 2017

அன்புடையீர் வணக்கம்,
இந்த வருடத்திற்கான சாணக்கியா தேடல்.கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சாணக்கியா என்ற தலைப்பில் வணிக வினாடி வினா மற்றும் சிறந்த மேலாளர் போன்ற  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 14,2017அன்று சாணக்கியா நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் உண்டு.மேலும் பார்வையாளர்களுக்கும் சிறந்த பரிசு உண்டு. வணிகவியல் சார்ந்தும் சாராமலும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
பெண்கள் வணிகத்திலும் சாணக்கியர் தான் என்பதை நிரூபிக்க சிறந்த ஒரு வாய்ப்பாக அமைய  உள்ளது.ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் தொடர்புக்கு, ஆர்.வாசுகி - 8807473229 (வணிகவியல் துறைத்தலைவர்)


செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்

கனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்றஇணையமாநாட்டில் வழங்கிய கட்டுரை......
     மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தைகற்றுப்பாதி,கல்லாமற்பாதிஎன்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல, கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றைவைத்துக்கொண்டுஅவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவைஉருவாக்குகின்றமுறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது.மனிதர்களுக்கு

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைப்பு - தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்
கருத்தரங்க நாள் - 12.12.2017

கட்டுரை வழங்க இறுதி நாள் - 15.11.2017
தொடர்புக்கு - 9894829151 தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



குளம் குட்டை ஏரி

அன்றோ....
எனக்கான
இடத்தை
நீ
ஆக்கிரமிப்பு
செய்தாய்....!!!
இன்றோ...
நானே
மீண்டும்
ஆக்கிரமிப்பு
செய்தேன்....!!!
சாதாரண
தண்ணீராக
அல்ல...
வெள்ளமாக........

# குலம் குட்டை ஏரி #

-----மு. நித்யா.

இயற்கை

எண்ணி
விடாதே,,,
நீ
எனக்கெதிராக
செய்வதை
தாங்கி
கொண்டிருக்கிறேன்
என்று...
தாங்க
முடியாது
ஒரு நாள்,,,,
உனக்கெதிரான
என்
சீற்றத்தை...

# இயற்கை #

-----மு. நித்யா.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..

வணிக நோக்கில் கல்வியா.?
கல்வியை வைத்து வணிகமா.?
அறிவை பெறுபவர்கள் குறைவா. .?
அறிவை விற்பவர்கள் அதிகமா. ?
அரசும் சட்டங்களும் மக்களுக்கா. ?
மக்கள் அரசுக்கும் சட்டத்திற்குமா.?
இது ஜனநாயக நாடா. .?
பணநாயகர்கள் நாடா. .?
ஏழ்மையை ஒழிக்க தேர்வுகளா. ?
ஏழையை ஒழிக்க தேர்வா. ?
அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகள் தேவையா. ?
அரசியல் வேலைக்கு தேர்வுகள் தேவையில்லா போட்டியா. .?
ஒரு பக்கம் நீலத் திமிங்கலம் விளையாட்டு மூலம் தற்கொலை. ?
மறு பக்கம் நீட் தேர்வு என்ற பெயரில் தற்கொலை. ?
ஒருபுறம் கந்துவட்டி.?
மறுபுறம் ஜிஎஸ்டி.?

இத்தனை கேள்விகளுக்கு காரணம் என்ன தெரியுமா. ?
நமது மூளையும் உரிமையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அரசியல்வாதிகளிடமும் விலை போனதே அதன் தொடர்ச்சி தான் இவைகள் அனைத்தும்...


எங்கே போகிறோம் நாம் ...

சின்ன வயதில் வெளியில் சென்று உன் தோழி தோழர்களுடன் விளையாடு என்று கூறிய அம்மா இன்று வெளியில் செல்லாதே என்று  கண்டிக்கிறார் ......
நண்பர்களுடன் ஒன்றாக உடல் வருத்த மகிழ்ச்சியாய் விளையாடிய நாம் இன்று முகநூல் மூலம் ஆன்லைனில் விளையாடி கொண்டிருக்கிறோம் ...எனவே தான் தீரா நோய்களும் நம்மிடம் விளையாடி கொண்டிருக்கின்றன
நாம் கெட்டது அல்லாமல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கும்
இதை பழக்கிக் கொடுத்து கொண்டு இருக்கிறோம் ..... இனியாவது குழந்தைகளை உடல் உழைக்க விளையாட விடுங்கள் அப்பொழுதுதான் அவர்களின் உடலும் , மனமும் பலம் அடையும்...

முகங்கள்

வெளிப்படையாக இருப்பதை விட வேசம் போடுபவர்க்குத்தான் இந்த உலகில் மதிப்பு அதிகம்
நாம் ஒவ்வொருவர்க்கும் பல முகங்கள் உண்டு  .....நம்குடும்பத்திற்கு ஒரு முகம் ,நம் நண்பர்களிடம் ஒரு முகம் ,நாம் அன்றாடம் வேலை செய்யும் இடத்தில் ஒரு முகமுமாக நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....ஆனால் இதில் எதிலுமே நம்முடைய     சுயரூபத்தை மற்றவர்க்கு வெளிகாட்ட தயங்குகிறோம் ஏன்?ஏனென்றால் எங்கே நமது சுயரூபத்தை பார்த்துவிடுவார்களோ என்று பயத்தினாலும் தயக்கத்தினாலும் தான்,....
நாம் போடும் இந்த வேசத்தால் நம்முடைய சுய பின்பத்தை நாம் இலக்கிறோம் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்...
  வெளிப்படையாக இருங்கள் ..மற்றவர்களுக்காக உங்களின்
 சுயத்தை நீங்கள் இழக்க தயாராய் இராதீர்கள்...

மூன்று மணிநேரம் தேர்வுகள்.

மூன்று மணிநேரம் தேர்வுகள்...
மூன்றாண்டுகளுக்கு பிறகு..?
மாணவர்களின் எதிர்காலம்..?
இதற்கு யார் காரணம்..?
கல்வி நிறுவனங்களா..?
பெற்றோர்களின் பேராசையா அல்லது அவர்களின் முட்டாள்தனமா ..?
மாணவர்களின் கவனக் குறைவா..?
கல்வி சேவையா அல்லது முதலீடா..?
இவர்களில் யார் மீது தவறு..?