வியாழன், 2 ஜூன், 2016

ஸ்டீவன் ஆலென் ஸ்பீல்பெர்க்

                                             
Image result for ஸ்டீவன் ஆலென் ஸ்பீல்பெர்க்

இவர் யார்? என்று சட்டென்று புரிந்து கொள்ளாதவர்கள் கூட, இவர் தயாரித்த ஜாஸ், ஈ.டி, ஜூராஸிக் பார்க் போன்ற படங்களைப் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்.
     ஜூராஸிக் பார்க் படம் பார்த்த போது ஒரு பெரிய டயனேஸர் ஒன்று நம்மை துரத்திக்கொண்டு வருவதைப் போல பார்த்து பயந்து அலறியது உங்கள் நினைவுக்கு வருகிறது அல்லவா? மிகமிக வித்தியாசமான படங்களை எடுத்து புகழ் பெற்றவர் ஸ்பீல்பெர்க்.
     உலக அளவில் சிறந்த டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர். பல ஆஸ்கார் விருதுகள் வாங்கி இருக்கிறார். இவரது படங்கள் உலக அளவில் அதிக வசூலைத் தந்து வருகின்றன. அமெரிக்காவில் ஓகையோ மாநிலத்தில் சின்சினாட்டி என்னும் இடத்தில் 1946ஆம் வருடம் பிறந்தவர் இவர். தந்தை ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவரது இளமைக் காலம் ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதை உணர்த்தியது.
     இவர், தனது சிறு வயதிலேயே 8 மில்லி மீட்டர் திரைப்படங்களைத் தயாரித்து தன் நண்பர்களிடம் போட்டுக் காண்பிப்பதில் ஆர்வம் காட்டினார். வீடே தான் திரையரங்கு. ஜன்னல்களுக்கு கருப்புத் திரைகளைப் போட்டு இருட்டாக்கி படத்தைக் காட்டினார். கட்டணம் உண்டு 25 சென்ட்(ஒரு டாலர் 100 சென்ட்) சினிமா என்றால் தின்பண்டம் இல்லாமலா? இவரது சகோதரி பாப்கான் விற்றார்.
     1958 ஆம் வருடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சாரணர் படையில் சேர்ந்த அவர், ‘தி லாஸ்ட் கன் ஃபயிட்’ என்னும் படத்தை 8 மில்லி மீட்டரில் எடுத்தார். அதற்கு பரிசும் பாராட்டுகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தனது பதின்மூன்றாவது வயதில் அவர் தயாரித்த, ‘எஸ்கேப் டூ நோ வேர் ‘ என்னும் 40 நிமிட படத்திற்கு விருது கிடைத்தது. யுத்தத்தின் விளைவுகளை பற்றிய படம் இது. மிகவும் இளம் வயதில் திரைப்படம் தயாரித்து அதற்கு விருதும் பெற்றவர் ஸ்பீல்பெர்க்.

                                (படித்ததில் பிடித்தது)

1 கருத்து: