திங்கள், 30 மே, 2016

மனித கணிணி......!



சாகுந்தலாதேவி;

      கணிதத்தில் பிறவி மேதை என்று கூறப்படுபவர். உலக அளவில் பாராட்டப்படுபவர். கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை பதிவாகி உள்ளது.
      கணிணி வேகமா? அல்லது இவரது மனம் வேகமா? என்று தீர்மானிப்பது கடினம். இவரை ”மனித கணிணி” என்று கூறுவதும் உண்டு. ஆனால் இவர் அதை விரும்புவது இல்லை.
     மனித மூளை கணிணியை விட நுட்பமானது என்னும் கருத்தை உடையவர். 1980ம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணிணி தேர்ந்தெடுத்து கொடுத்த 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்கிற இரண்டு 13 இலக்க எண்களை மனதினாலேயே பெருக்கி சரியான விடையை 28 நொடிக்குள் கூறிவிட்டார்.
     1939 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்தவர். சாகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் பணிபுரிந்து வந்தவர். சாகுந்தலா தேவி மனதினாலேயே பெருக்கும் திறமை அவரது மூன்றாம் வயதிலேயே வெளிப்பட்டது.
     அவருக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடைய திறமை நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திறமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 8.
     1980 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 நிமிடங்களுக்குள் கூறினார். எல்லாம் மனதாலேயே அவர் செய்தார். சரியான விடையை மனதால் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை விட, அந்த விடையை எண்களாக கூற எடுத்துக்கொண்ட நேரமே அதிகம் என்று பின்னர் தெரிவித்தார்.
     தான் சிறந்த கணித மேதையாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற கணித மேதைகள் உருவாக எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.
                                   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக