ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ரெயில் பெட்டி தொழிற்சாலை


Image result for சென்னை பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை

ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி சாதனை படைக்கும் நிறுவனம் என்றால் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையை சொல்லலாம். “இன்டிக்ரல் கோச் பேக்டரி” எனப்படும். இது, சென்னையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று.இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை செய்கிறார்கள்.


இந்த தொழிற்சாலையை 1995 ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அன்றைய பிரதமர் ஐவகர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
துவக்கத்தில் 350 ரெயில் பெட்டி கூடுகளை மட்டும் தயாரித்தது.
ரெயில் பெட்டியின் உட்புற கலன்களை தயாரிக்கும் திறனை 1962 –ம் ஆண்டில் எட்டியது.பின்பு ரெயில் பெட்டிக்குள் உள்கட்டமைப்புகளையும்
உருவாக்கத் தொடங்கினார்.

இது மேலும் 1974,1987 –ம் ஆண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கின. தைவான, வங்காளதேசம், தாய்லாந்து, பிலிப் பைன்ஸ் , உகாண்டா, தான்சானியா, இலங்கை, போன்ற நாடுகள் தங்களுக்கு தேவையான ரெயில் பெட்டிகளை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைகளில் பெற்று கொள்கின்றன.
ஒரு ஆண்டில் 1250 ரெயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்தது, இந்த தொழிற்சாலை. தனது தயாரிப்புகளுக்காக பல்வேறு விருதுகள், தர சான்றுகளை இது பெற்றுள்ளது.

Image result for சென்னை பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை


பயணிகள் பெட்டி மட்டுமன்றி ராணுவத்திற்கு பயன்படும் மருந்துப் பெட்டி, சரக்கு பெட்டிகள், விபத்து ஏற்படும் போது பயன்படும் அவசரகால மீட்பு பெட்டிகள், தொலைதூர பயணத்திற்கான உணவறை பெட்டிகள் என்று பல வகையான ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
உலகில் பல நாடுகளில் பெரம்பூர் ரெயில் பெட்டி  தொழிற்சாலையில் தயாரித்த ரெயில் பெட்டிகள் ஓடுகின்றன என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது என்றால் மிகையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக