ஞாயிறு, 6 மார்ச், 2016

பிளாஷ் பேக் எனும் புரட்சி


                        பிளாஷ் பேக் எனும் புரட்சி
Image result for பிளாஷ்பேக்

முன்னுரை
ஒரு திரைப்படம் என்றால் நாம் எதிர்ப்பார்ப்பது பலவாக இருக்கும். நகைச்சுவை, காதல், சண்டை, சோகம், பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு பிளாஷ் பேக்கை காட்டிவிடுகிறார்கள். இதில் பெரிதாக இருக்கும் படத்தை சுருக்கிச் சொல்லி சிறியதாக்கிவிடுகிறார்கள்.
கண்டுபிடிக்கப்படாத காலம்
 ஆனால் இந்த பிளாஷ் பேக் உத்தி கண்டுபிடிக்காத காலங்களில் சினிமா என்பது ஒரு போரடிப்பதாக இருந்தது. ஒரு கதையை சொல்ல வேண்டும் என்றால் அதன் தொடக்கத்தில் இருந்து  வரிசைப்படி தான் சொல்ல வேண்டும். எடிட்டிங் என்ற தொழில்நுட்பமும் அப்போது இல்லை. அதனால் காட்சிகளையும் கதையின் படியே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்றால், அவன் சிறுவனாக இருந்தது, பல வேலைகளைச் செய்ததது, வளர்ந்து பணம் சேர்த்தது, பணக்காரன் ஆனது என்று படிப்படியாகத்தான் காட்ட முடியும். இதனால் பார்ப்போர் சலித்துப்போனார்கள்.
பிளாஷ்பேக்
 ஆனால், இப்போது எடுத்தவுடன் ஹீரோவைப் பெரிய பணக்காரனாக காட்டிவிட்டு, அதன்பின் சின்ன பிளாஷ்பேக்கில் அவன் கஷ்டப்படுவதையும் காட்டிவிடலாம். பிளாஷ்பேக் என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள்.

முதல் பிளாஷ்பேக் சினிமா
இதை சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய ரொஷோமான் படத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். படத்தில் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அதில் சம்பந்தபட்ட நான்கு பேரை விசாரிக்கும் போது, ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் அந்த சம்பவத்தை விவரிப்பார்கள். நான்கு கோணங்களில் கதை நகரும். இறுதி வரை கொலையாளி யார் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கும். இது தான் அந்த படத்தின் கதை. திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் அகிரா குரோசோவா இயக்கிய மிகச்சிறந்த படம் இது.
அசையும் காட்சிகளுக்கு அடுத்த புரட்சி

இதன் மூலம் அவர் கொண்டு வந்த சிந்தனையான பிளாஷ்பேக் என்ற யுத்தி, லூமியர் சகோதரர்களால் கண்டுபிடித்த அசையும் காட்சிகளுக்கு அடுத்து, ஒரு பெரிய புரட்சியாக கருதப்பட்டது. இந்த கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” படம் வந்தது. திரைக்கதையில் சில விஷயங்களை மறைத்து, ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த, பெரும்பாலான இயக்குனர்களுக்கு இன்று வரை பிளாஷ்பேக்தான் பயன்படுகிறது.


1 கருத்து: