ஞாயிறு, 6 மார்ச், 2016

மரகதப் புறா


                      Image result for மரகதப் புறா


 தமிழ்நாட்டின் மாநிலப்பறவையாக மரகதப்புறா உள்ளது.வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும்,கிழக்கே இந்தோனேசியா,வடக்கு,கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் காணப்படும் மனைவாழ் புறாவாகும்.இப்புறா பச்சைப்புறா எனவும், பச்சைஇறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது.இப்புறா ஐந்தடி உள்ள மரங்களில் கூடுக்கட்டி வாழ்கிறது.

மரகதப் புறாக்கள் தனித்தோ,இரட்டையாகவோ அல்லது சிறு குழுவாகவோ காணப்படுகிறது.இவை நிலத்தில் விழுந்த பழங்களை தேடி உண்ணுகிறது.இவை பெரும்பாலும் நிலத்தில் நடப்பதையே விரும்புகிறது.இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும்.இவை மூக்கிலிருந்து "ஹு- ஹு- ஹுன்" என்று ஓசையிடுகின்றன.இவை கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
.
 

4 கருத்துகள்: