வியாழன், 3 மார்ச், 2016

வில்லியம் காங்ரீவ்

                                             வில்லியம் காங்ரீவ்(19ஆம் நூற்றாண்டு)

வில்லியம் காங்ரீவ் பார்ட்செ என்ற இடத்தில் பிறந்தார்,தனது பட்டப்படிப்பை டிரினீடி கல்லூரி டப்லினில் படித்தார்.அங்கு அவர் ஜொனதன் ஸ்விஃட்டை சந்தித்து நன்பரானார்.அவரது அனைத்து நாடக நூல்கல் அனைத்தும் அவரது முப்பது வயதிற்குள் எழுதி முடித்தார்.ஏனைய காலங்களில் சமுதாயத்தில் நல்ல ஒரு தலைசிரந்த மனிதராய் களித்தார்.மேலும் அரசாங்கமிடம் இருந்து அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.பின்பு வில்ஸ் தேனீர் விடுதியில் டிரைடனை சந்தித்து அவரது நெறிகளை பின்பற்றினார்.
இவர் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.இவர் எழுதிய முதல் நாடகம்
                        ``த ஓல்ட்டு பாசுலர்’’.
இந்த நாடகம்``டுரூரி லேன்’’என்ற திரையரங்கிள் தயாரிக்கப்பட்டது.இதனையடுத்து
`                       ``டபுல் டீலர்’’
என்ற நாடகம் அவரது நகைச்சுவை நயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தம் முப்பது  வயதில் இவர்
``லவ் ஃஆர் லவ்’’,
``தி வே ஆப் தி வேல்ற்டு’’
என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றினார் பின்னர்
``தி மார்னிங் பிரிட்ச்’’
என்ற ஒரு சோகக்கதை எழுதினார்.இவர் எழுதிய நூல்களில் சமக்காலத்தில் ஆண்ட அரசியான எலிசபெத்தின் ஆட்சியை பற்றியும் அந்த சமூகத்தை பற்றியும் இவர் குறிப்பிடவில்லை.
அவரது படைப்புகளில் ``நகைச்சுவை நயதை’’சிறந்த முறையில் வடிவமைத்திருப்பார்.மேலும் இவரது கதைளில் தெளிவு,உயிரோட்டம்,வரிகளில் இசையின் கலப்பு, கதாப்பாத்திரங்களை விவரிக்கும் முறை,ஆகியன தனித்துவம் வாய்ந்தவை.ஒரு நாடக எழுத்தாளராய் இவரது பணிகாலம் மிகவும் குறைவு.சிறு காலங்கள் இவர் கவிதை,மொழிபெயர்ப்பு ஆகியன செய்தார்.இவர் ஒரு திருமணம் ஆகாதவர்.ஆனால், ஹென்ரீடா என்ற பெண்னுடன் விவகாரம் இருந்தது.மேரி என்ற குழந்தையும் இருந்ததாக கருதப்பட்டது. இவர் கான்டிராஸ்ட்(கண்களில் நீர் வழிதல்) கவுட்(மூட்டுகளில் வலி)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டார்.பின்பு லண்டனில் ஒரு விபத்தை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல்1729இல் மரணம் அடைந்தார். இவரது சடலம் வெஸ்ட் மினிஸ்டர் அபே இல் புதைக்கப்பட்டது.

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக